கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
[[File:Charcoal pile 05.jpg|thumb|right|190px|திறந்தவெளி {{PAGENAME}} உருவாக்கம்,1900, [[நெதர்லாந்து]].]] |
[[File:Charcoal pile 05.jpg|thumb|right|190px|திறந்தவெளி {{PAGENAME}} உருவாக்கம்,1900, [[நெதர்லாந்து]].]] |
||
[[File:Charbon de bois rouge.jpg|thumb|right|190px|எரியும் அடுப்புக்'''கரி''']] |
[[File:Charbon de bois rouge.jpg|thumb|right|190px|எரியும் அடுப்புக்'''கரி''']] |
||
முதன்முதலாக [[மனிதர்|மானுட]] பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது.எனினும், [[உலகம்|உலகின்]] பல இடங்களில் இதன் பயன்பாடு [[பரவலாக்கம்|பரவலாக]] |
முதன்முதலாக [[மனிதர்|மானுட]] பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது. எனினும், [[உலகம்|உலகின்]] பல இடங்களில் இதன் பயன்பாடு [[பரவலாக்கம்|பரவலாக]] இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் [[மூலப் பொருள்|மூலப்பொருட்களை]]த் தொழிற்சாலைகளில் [[அறிவியல்]] முறையில் எரிக்கும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாகத் திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் [[வளி]] நுழையும் வண்ணம் [[கட்டிடம்]] அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது. |
||
[[File:Charcoal Kiln.JPG|thumb|right|150px|மூடிய நிலை{{PAGENAME}} உருவாக்கம், [[அமெரிக்கா]]]] |
[[File:Charcoal Kiln.JPG|thumb|right|150px|மூடிய நிலை{{PAGENAME}} உருவாக்கம், [[அமெரிக்கா]]]] |
||
==செயற்கைக் கரி== |
==செயற்கைக் கரி== |
||
* எரியும் தீயில் நீர் ஊற்றி அணைத்து மிஞ்சும் கரி அடுப்புக்கரி எனப்படும். |
* எரியும் தீயில் நீர் ஊற்றி அணைத்து மிஞ்சும் கரி அடுப்புக்கரி எனப்படும். |
03:58, 30 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
கரி (ஆங்கிலம்-Charcoal) என்பது தாவரங்களும், விலங்குகளும் எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் திட எரிபொருள் ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள நீர், ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் பொருள் கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை தொழிற்சாலைகளில், தீயாற்பகுப்பு / வெப்பச் சிதைவு முறையில் உருவாக்குகின்றனர்.
நம் பூமி அன்னையின் நுரையீரல் எனப்படும், அமேசான் காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. பிரேசில் போன்ற சில நாடுகளின் பொருளாதார வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது.
தோற்றம்
முதன்முதலாக மானுட பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது. எனினும், உலகின் பல இடங்களில் இதன் பயன்பாடு பரவலாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் மூலப்பொருட்களைத் தொழிற்சாலைகளில் அறிவியல் முறையில் எரிக்கும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாகத் திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் வளி நுழையும் வண்ணம் கட்டிடம் அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது.
செயற்கைக் கரி
- எரியும் தீயில் நீர் ஊற்றி அணைத்து மிஞ்சும் கரி அடுப்புக்கரி எனப்படும்.
- மூட்டக் கரி. பச்சை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு வாரம் உலர்ந்ததும் கூம்பாக அடுக்கி அதன் மேலே பயிர் அறுவடை செய்த தட்டை போன்ற புல் வகைகளைச் சார்த்தி சேற்றுமண் கோட்டு அதன்மேல் மெழுகி, உள்ளே தீயிட்டு உள்ளேயே எரிந்து அடுக்கப்பட்ட மரத்துண்டுகளின் அளவுக்கு ஏற்ப நானகைந்து நாள் புழுங்குமாறு செய்து பின்னர் நீர் ஊற்றி அணைத்துக் கரியை எடுத்துக்கொள்வர். மூட்டம் போட்டுச் செய்த கரி மூட்டக்கரி.
சங்க இலக்கியங்களில் கரி
பின்வரும் பொருளில் தமிழ் இலக்கியங்களில் கரி என்னும் சொல் கையாளப்படுகிறது.
- சாட்சியம் - கரிபோக் கினாராதலானும் (தொல்காப்பியம். பொ. 649, உரை).
- யானையையும் குறித்தது - கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாசகம் 6, 19).
- எரித்துக் கரியாக்குதல் - கரித்த மூன்றெ யில் (கம்பராமாயணம். ஊர்தேடு. 44).
- கரி = எரிபொருள் = இருந்தை - வாலிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடியார். 258).
- கரி = எரிபொருள். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை (அகநானூறு. 75)
- கண்ணிடுமை - கரிபோக்கினாரே (சீவக சிந்தாமணி. 626).
- அக்கினி பகவானின் ஏழுநாக்களில் ஒன்று.
- வெறுத்தல் - கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை (திருமந்திரம் 2431).
- கரி என்னும் சொல் பயனாகும் திருக்குறள்களின் எண்கள்: 25, 177, 245, 277, 1060
- சாட்சி கூறுவோன் - இந்திரனே சாலுங் கரி (குறள், 25).
படங்கள்
-
இந்திய மூட்டக்கரி