[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

குபிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
குபிட்
Cupid
வில்லுடன் குபிட்டின் பழைமையானச் சிலை ஒன்று
அதிபதிஆசை, பாலுணர்வு காதல், வசீகரம், மற்றும் பரிவும்
வகைஉரோமானியரின் காதல் தெய்வம்
ஆயுதம்வில் மற்றும் அம்பு
பெற்றோர்கள்மெர் குறி மற்றும் வீனஸ்
ஒரு பாலகனாகச் சித்தரிக்கும் ஓவியம்

குபிட் (ஆங்கிலம்: Cupid), பண்டைய உரோமானியரின் காதல் தெய்வமாகும். (மன்மதனுக்கு இணையான தெய்வம்). கிரேக்கர்களிள் காதல் தெய்வமான ஈரோசு (Eros) க்கு ஒப்பான தெய்வமுமாகும். மேலும் மெர்குறி மற்றும் வீனசு ஆகியத் தெய்வங்களின் மகனாவான்.[1] பொதுவாக இறக்கையுடன் கூடிய சிறு பாலகனாக வருணிக்கப்படும் இக்கடவுள் வில்லும் கணையும் கொண்டு விளங்குகிறான். (மன்மதனின் மலர் வில்லும் கணையும் போன்று), மனிதர்களிடம் இக்கணையினை ஏவி காயத்தினை உண்டாக்க, இக்காயம் அவர்களிடம் காதலையும் பாசத்தினையும் அன்பையும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் எளிலான இளைஞனாகவும் சித்தரிக்கப்படுகிறான். நல்லவனாகக் காட்டப்பட்டாலும் அவ்வப்போது குறும்பு செய்பவனாகவும் இருக்கிறான்.

நூல் உதவி

  • Britannica ready reference encylopedia vol 3

ஆதாரங்கள்

  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.

வெளியிணைப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
குபிட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபிட்&oldid=2010581" இலிருந்து மீள்விக்கப்பட்டது