தொழில்நுட்பமும் சமூகமும்
தொழில்நுட்பமும், சமூகமும், வாழ்க்கையும் (Technology, society and life) அல்லது தொழில்நுட்பமும் பண்பாடும் (Technology and culture) என்பது தொழில்நுட்பத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள ஊடாட்டச் சார்புகளைக் குறிக்கிறது. இவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதோடு ஒன்றின்மீதொன்று தாக்கம் செலுத்தி ஒன்றையொன்று புத்தாக்கமுறச் செய்கின்றன. அதாவது, தொழில்நுடபம் பண்பாட்டையும் பண்பாடு தொழில்நுட்பத்தையும் மாற்றுகின்றன. இந்த ஒருங்கிணைவான ஊடாட்டங்கள் மாந்தன் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கருவிகளின் உருவாக்கம் அதன் பண்டைய எளிய கருவிகளில் இருந்து இன்றைய சிக்கலான அச்செந்திரம், கணினி வரை தொடர்கிறது. அறிவியல், தொழினுட்பம், சமூகம் அகியவற்றின் ஊடாட்ட விளைவுகளையும் தாக்கங்களையும் பயிலும் கல்விப் புலம் அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள் எனப்படுகிறது.
தொழில்நுடபத்தின் எளிய வடிவம் கருவியாக்கமும் பயன்பாடுமாகும். முந்து வரலாற்றுக் காலத்தின் கண்டுபிடிப்பான தீக்கட்டுபாடும் புதிய கற்காலப் புரட்சியும் உணவு வளங்களைப் பெருக்கியது. சக்கரத்தின் கண்டுபிடிப்பு மாந்தர் பயணம் செய்யவும் சுற்றுச்சூழலைக் கட்டுபடுத்தவும் உதவியது. தொடர்ந்த அச்சகம், தொலைபேசி, இணையம் போன்ற வரலாற்றியலான வளர்ச்சிகள் உடல் உழைப்பைக் குறைத்ததோடு, தொடர்பாடல் அரண்களைத் தகர்த்தெறிந்து உலகளாவிய நிலையில் தங்குதடையின்றி மாந்தர்கள் உறவாட வழிவகுத்தன.
தொழினுட்பம் பல விளைவுகளை உருவாக்குகிறது. இது, (இன்றைய பொருளிய உலகமயமாக்கம் உட்பட) மிக முன்னேறிய பொருளியலை உருவாக்குகிறது. மேலும் ஓய்வுச் சமூக வகுப்பொன்றை எழுச்சி காணவைத்தது. பல தொழில்நுட்பச் செயல்முறைகள் மாசுறல் போன்ற தேவையற்ற விளைபொருள்களை உருவாக்கி, இயற்கை வளங்களை அருகச் செய்து புவியின் சுற்றுச்சூழலைக் குலைவுறச் செய்கிறது. புத்தாக்கங்கள் சமூகப் பண்பாட்டு விழுமியங்களைத் தாக்கி, புதிய தொழில்நுட்ப அறவியல் சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது. எடுத்துகாட்டாக மாந்த ஆக்கத்திறனின் திறமை பற்றிய ஆய்வுக்குத் தூண்டி உயிர் அறவியல் சார்ந்த அறைகூவல்களை முன்வைக்கிறது.
தொழினுட்பம் அதன் பயன்பாடு பற்றிய மெய்யியல் விவாதங்களையும் தோற்றுவித்தது. தொழினுட்பம் மாந்த வாழ்க்கையை மேம்படுத்துகிறதா இல்லை இழக்கச் செய்கிறதா என்பது பற்றி உடன்பாடுகளும் மறுப்புகளும் எழுந்தன. பல எதிர்வினை இயக்க்ங்கள் அங்கிங்கெனாதபடி தொழினுட்பம் ஊடுருவுவதால் சுற்றுச்சூழல் கேடுற்று, மாந்தரை அயன்மை உணர்வுக்குத் தள்லுகிறதென எதிர்த்தனர்; அதேவேளையில் மீவுமனிதத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றவாதம் போன்ற கருத்தியலாளர்கள் தொழில்நுட்ப முன்னேற்ரம் சமூகத்துக்கும் மாந்த வளர்ச்சிக்கும் ந்லம்பயக்கிறதென வாதிட்டனர்.
முந்து வரலாற்றுக் கட்டம்
[தொகு]வரலாற்றில் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மாந்த வளர்ச்சிக்கு கற்கருவிகள் அடிப்படையாக அமைந்தன என வேட்டையாடல் கருதுகோள் கருதுகிறது.
தீயின் கண்டுபிடிப்பும் கட்டுபாடும் உடன்விளைவாய் ஏற்பட்ட சமையலும் வேகமான மாந்தப் படிமலர்ச்சிக்கு உந்துதல் அளித்த்து என உயர்பாலூட்டியியல் அறிஞர் இரிச்சர்டு விராங்காம் கோட்பட்டுமயப் படுத்துகிறார்.[1] துப்பாக்கி, குறுமிகள், எஃகு எனும் நூல் மிக முதிய வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் மாந்தரின் கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவித்தமையால் அவர்கள் நெருக்கமாக உறவுகொள்ளவைத்து சமூகத்தைத் தோற்றுவித்தது எனப் பரிந்துரைக்கிறது.
பொருளியலும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
[தொகு]பண்டைய வரலாற்றில், பொருள்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்ளும் பண்டமாற்றுக்குப் பதிலாக, நாளடைவில் வணிகக் கட்டமைப்பு சந்தைமுறையில் உருவாகியதும் பொருளியல் தொடங்கிவிட்டது. அம்புத்தலையைச் செய்தவர்கள் அதைச் செய்வதிலேயே முழுதும் ஈடுபாட்டு பிற வாழ்க்கைத் தேவைகளுக்குப் பண்டமாற்றைப் பயன்படுத்தலாயினர். கூடு, மணி போன்ற நகைகளினைச் செய்ய ஓரள்வு கைத்திறன் மிக்க தொழினுட்பம் தேவைப்பட்டது, மேலும் குறிசொல்வோர், பூசாரிகளின் சில பொருட்களைச் செய்யவும் தொழினுட்பம் தேவையானது. எனவே தொடக்கத்தில் இருந்தே, தொழினுட்பம் விரிவான உறவுகளை ஏற்படுத்தி பொருளியல் வளர்ச்சிக்கு வித்திட்டது. எனவெ,, தொழினுட்பம் பொருளியல் வளர்ச்சிக்கு முதன்மையான வாயிலாக விளங்கியுள்ளது.[2]
மேலும் காண்க
[தொகு]அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Catching Fire: How Cooking Made Us Human
- ↑ See, e.g., Andrey Korotayev, Artemy Malkov, and Daria Khaltourina. Introduction to Social Macrodynamics: Compact Macromodels of the World System Growth பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-484-00414-4
- Volti, Rudi (2017). society and technological change. New York: Worth. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781319058258.
மேலும் படிக்க
[தொகு]- Puricelli, F (2011). "Early Twentieth Century Transportation Technology and the Creation of Modern American Culture " (PDF). Archived from the original (PDF) on 2014-11-03.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Rückriem, F (2009). Digital technology and mediation: A challenge to activity theory. Learning and expanding with activity theory'.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Katz, M (2011). Capturing Sound: How Technology Has Changed Music.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hendery, S (2009). "Great gadget, stratospheric price".
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Cochrane, T; Bateman, R (2010). "Smartphones give you wings: Pedagogical affordances of mobile Web 2.0. Australasian Journal of Educational Technology". Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Adas, Michael (1989). Machines as the Measure of Men: Science, Technology, and Ideologies of Western Dominance. Ithaca: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-2303-1.
- Bereano, P. (1977). Technology as a Social and Political Phenomenon. Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471068756.
- Castells, Manuel (2009). The Rise of the Network Society (2nd ed.). Oxford, UK.: Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405196864.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dickson, D. (1977). Politics of Alternative Technology. Universe Publisher, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0876639171.
- Easton, T. (2011). Taking Sides: Clashing Views in Science, Technology, and Society. McGraw-Hill/Dushkin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0078050278.
- Huesemann, Michael H., and Joyce A. Huesemann (2011). Technofix: Why Technology Won’t Save Us or the Environment, New Society Publishers, Gabriola Island, British Columbia, Canada, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0865717044, 464 pp.
- Andrey Korotayev, Artemy Malkov, and Daria Khaltourina. Introduction to Social Macrodynamics: Compact Macromodels of the World System Growth பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-484-00414-4 ]
- MacKenzie, D., and J. Wajcman. (1999). The Social Shaping of Technology. McGraw Hill Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0335199135.
- McGinn, Robert E. (1991). Science, Technology, and Society. Englewood Cliffs, N.J.: Prentice-Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-794736-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mesthene, E.G. (1970). Technological Change: Its Impact on Man and Society. Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0674872355.
- Mumford, L. (2010). Technics and Civilization. University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226550273.
- வார்ப்புரு:Noble1984
- Postman, N. (1993). Technopoly: The Surrender of Culture to Technology. Vintage, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0679745408.
- Sclove, R.E. (1995). Democracy and Technology. The Guilford Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 089862861X.
- Dan Senor and Saul Singer, Start-up Nation: The Story of Israel's Economic Miracle, Hachette Book Group, New York, (2009) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-446-54146-X
- Shaw, Jeffrey M. (2014). Illusions of Freedom: Thomas Merton and Jacques Ellul on Technology and the Human Condition. Eugene, OR: Wipf and Stock. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1625640581.
- Smil, Vaclav (1994). Energy in World History. Boulder: Westview Press. pp. 259–267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-1901-3. Cited at Technology Chronology (accessed September 11, 2005).
- Williams, Robin; Edge, David (1996). "What is the Social Shaping of Technology? (The Introduction to paper "The Social Shaping of Technology".)". Research Policy 25. Archived from the original on September 17, 2006. பார்க்கப்பட்ட நாள் August 10, 2006.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Winston, Morton (2003). "Children of invention". In Morton Winston and Ralph Edelbach (eds.), (ed.). Society, Ethics, and Technology (2nd ed.). Belmont, Calif.: Thomson/Wadsworth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-58540-X.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: extra punctuation (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Science, Technology, and Society: An International Journal பரணிடப்பட்டது 2016-11-20 at the வந்தவழி இயந்திரம்
- Scientists for Global Responsibility
- Technology and Society Books and Journal Articles
- Technology and Society Book Reviews பரணிடப்பட்டது 2019-12-21 at the வந்தவழி இயந்திரம்
- The Loka Institute பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்
- The New Atlantis: A Journal of Technology and Society
- Union of Concerned Scientists