நூருல் இசுலாம் பல்கலைக்கழகம்
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2004 |
வேந்தர் | முனை. ஏ. பி. மஜீத் கான் |
துணை வேந்தர் | முனை. ஆர் பெருமாள்சாமி |
அமைவிடம் | , , |
வளாகம் | ஊரகம், 300 ஏக்கர்கள் |
இணையதளம் | http://www.niuniv.com ; www.niceindia.com |
நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் (Noorul Islam University) முன்னதாக நூருல் இசுலாம் பொறியியல் கல்லூரி, தமிழ்நாட்டின் தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகே குமாரகோவிலில் அமைந்துள்ள தனியார் இருபாலர் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தை 1989இல் முனை. ஏ.பி. மஜீத்கான் என்பார் நிறுவினார்; இவர் தற்போது இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பிலுள்ளார். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை தனது இலக்காக இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
சிறப்புச் செயல்பாடு
[தொகு]நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் (NIU) அரசின் உதவியுடன் தனது செயற்கைக்கோளை விண்ணேற்ற திட்டமிட்டுள்ளது. ரூ.5-கோடி செலவுள்ள இந்தத் திட்டம் வேளாண்மை பயன்பாடுகளுக்கும் உயர்கல்வி மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் பணியாளர்கள் 18 பேர் மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். [1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "ISRO likely to launch satellites made by Indian students". thestatesman.com. 2 திசம்பர் 2015. Archived from the original on 2015-12-13. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)