மத்தியத்தரைக் கடல் பிராந்தியம், துருக்கி
மத்தியதரைக் கடல் பிராந்தியம்
Akdeniz Bölgesi | |
---|---|
துருக்கியின் பிராந்தியம் | |
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) மத்தியதரைக் கடல் பிராந்தியம் | |
நாடு | துருக்கி |
தலைநகரம் | ஆந்தாலியா |
மாகாணங்கள் | 8
|
பரப்பளவு | |
• மொத்தம் | 122,927 km2 (47,462 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4th |
மக்கள்தொகை (சனவரி 2022)(INSEE) | |
• மொத்தம் | 1,05,84,506 |
• தரவரிசை | 3வது |
இனம் | அக்டெனிஸ்லி |
நேர வலயம் | ஒசநே+03:00 (துருக்கி சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | TR-IDF |
NUTS Region | TR6 |
துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியம் (Mediterranean Region) (துருக்கியம்: Akdeniz Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் தென்துருக்கியில், மத்தியதரைக் கடலின் வடகிழக்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதில் 8 மாகாணங்கள் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் ஆந்தாலியா ஆகும். பிற நகரங்கள் அதானா, மெர்சின் மற்றும் காரமன்மராஸ் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இதன் மேற்கில் ஏஜியன் பிராந்தியம், வடக்கில் மத்திய அனதோலியா பிராந்தியம், கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், வடகிழக்கில் தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் மற்றும் தெற்கில் மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்கில் சிரியா உள்ளது.
மாகாணங்கள்
[தொகு]மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் 8 மாகாணங்கள் உள்ளது. அவைகள்:
- அதனா மாகாணம்
- அந்தால்யா மாகாணம்
- மெர்சின் மாகாணம்
- பர்தூர் மாகாணம்
- கத்தே மாகாணம்
- இஸ்பார்டா மாகாணம்
- உஸ்மானியே மாகாணம்
- கரமன் மாகாணம்
புவியியல்
[தொகு]துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் மலைகளால் சூழ்ந்துள்ளது. அவைகளில் முக்கியமானது தாரசு மலைத்தொடர்கள் மற்றும் நூர் மலைத்தொடர்கள் ஆகும். இம்மலைத்தொடர்களில் பெர்தன் ஆறு, செஹான் ஆறு மற்றும் செய்கான் ஆறுகள் உற்பத்தியாகிறது. இப்பிராந்தியத்தில் பெய்செகிர் ஏரி, எகிர்தீர் ஏரி மற்றும் பர்தூர் ஏரிகள் உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் ஆந்தாலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
227
15
6
|
139
15
6
|
100
18
8
|
61
22
11
|
32
26
14
|
9
31
19
|
6
35
22
|
5
34
22
|
16
31
19
|
86
27
15
|
172
21
10
|
269
16
7
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: Turkish State Meteorology [1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
இப்பிராந்தியத்தின் கடற்கரை பகுதிகள் நடுநிலக்கடல் சார் வானிலையைக் கொண்டது. இதன் உட்பகுதிகள் குறைந்த வெப்பம், குளிர் மற்றும் குளிர்காலத்தில் பனிப் பொழியும்.
இதனையும் காண்க
[தொகு]- மத்திய அனதோலியா பிராந்தியம்
- கிழக்கு அனடோலியா பிராந்தியம்
- தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்
- ஏஜியன் பிராந்தியம்
- கருங்கடல் பிராந்தியம்
- மர்மரா பிராந்தியம்
- அனத்தோலியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "İl ve İlçelerimize Ait İstatistiki Veriler- Meteoroloji Genel Müdürlüğü". Archived from the original on 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mediterranean Turkey