[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

சேக் அசீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷேக் ஹசீனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேக் அசீனா
Sheikh Hasina
শেখ হাসিনা
2023 இல் அசீனா
10-ஆவது வங்காளதேசப் பிரதமர்
பதவியில்
6 சனவரி 2009 – 5 ஆகத்து 2024
குடியரசுத் தலைவர்
முன்னையவர்பக்ருதீன் அகமது (பதில்)
பின்னவர்எவருமில்லை
முகம்மது யூனுஸ் (தலைமை ஆலோசகராக)
பதவியில்
23 சூன் 1996 – 15 சூலை 2001
குடியரசுத் தலைவர்
  • அப்துர் ரகுமான் பிசுவாசு
  • சகாபுதீன் அகமது
முன்னையவர்முகம்மது அபிபுர் ரகுமான் (பதில்)
பின்னவர்இலத்திஃபூர் ரகுமான் (பதில்)
8-ஆவது அவைத் தலைவர்
பதவியில்
6 சனவரி 2009 – 5 ஆகத்து 2024
முன்னையவர்காலிதா சியா
பின்னவர்-
பதவியில்
23 சூன் 1996 – 15 சூலை 2001
முன்னையவர்காலிதா சியா
பின்னவர்காலிதாசியா
8-ஆவது அவாமி லீக் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 பெப்ரவரி 1981
முன்னையவர்அப்துல் மாலிக் உக்கில்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
12 சூன் 1996 – 6 ஆகத்து 2024[1]
முன்னையவர்புசிபுர் ரகுமான் அவ்லாதர்
தொகுதிகோபால்காஞ்சு-3
பதவியில்
27 பெப்ரவரி 1991 – 15 பெப்ரவரி 1996
தொகுதிகோபால்காஞ்சு-3
2-ஆவது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
10 அக்டோபர் 2001 – 29 அக்டோபர் 2006
பிரதமர்காலிதா சியா
முன்னையவர்காலிதா சியா
பின்னவர்காலிதா சியா
பதவியில்
20 மார்ச் 1991 – 30 மார்ச் 1996
பிரதமர்காலிதா சியா
முன்னையவர்ஏ. எஸ். எம். அப்துர் ரப்
பின்னவர்காலிதா சியா
பதவியில்
7 மே 1986 – 3 மார்ச் 1988
குடியரசுத் தலைவர்உசைன் முகம்மது எர்சாத்
முன்னையவர்அசாதுசமான் கான்
பின்னவர்ஏ. எஸ். எம். அப்துர் ரப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அசீனா சேக்[2]

28 செப்டம்பர் 1947 (1947-09-28) (அகவை 76)
துங்கிபாரா, கிழக்கு வங்காளம், பாக்கித்தான்
அரசியல் கட்சிஅவாமி லீக்
பிற அரசியல்
தொடர்புகள்
பெரும் கூட்டணி (2008 முதல்)
துணைவர்(கள்)
எம். ஏ. வாசித் மியா
(தி. 1968; இற. 2009)
பிள்ளைகள்
  • சஜீப் வாசித்
  • சைமா வாசித்
பெற்றோர்
உறவினர்சேக்-வாசித் குடும்பம்
வாழிடம்இந்தியாவில் சுயமாகத் திணிக்கப்பட்ட நாடுகடத்தல்
கல்வி
கையெழுத்து

சேக் அசீனா வாசித் (Sheikh Hasina Wazed[a], பிறப்பு: 28 செப்டம்பர் 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதி ஆவார். இவர் சூன் 1996 முதல் சூலை 2001 வரையும், பின்னர் சனவரி 2009 முதல் ஆகத்து 2024 வரை வங்காளதேசப் பிரதமராகப் பதவியில் இருந்தார்.[3][4] இவர் வங்கத் தந்தை என அழைக்கப்படுபவரும் முதலாவது வங்காளதேச அரசுத்தலைவருமான சேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார். மொத்தம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பணியாற்றிய சேக் அசீனா, வங்கதேச வரலாற்றில் அதிக காலம் பதவி வகித்த பிரதமர் ஆவார். 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான வன்முறை எதிர்ப்புகளைத் தொடர்ந்து பிரதமர் பதவியைத் துறந்து 2024 ஆகத்து 5 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

உசைன் முகம்மது எர்சாத்தின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவாமி லீக்கின் தலைவரான அசீனா, 1991 நாடாளுமன்றத் தேர்தலில் எர்சாத்துக்கு எதிராக தன்னுடன் ஒத்துழைத்த காலிதா சியாவிடம் தோற்றார்.[5][6] எதிர்க்கட்சித் தலைவராக, காலிதா சியாவின் வங்காளதேச தேசியக் கட்சி தேர்தலில் நேர்மையற்ற முறையில் வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டி, அசீனா நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.[7] காலிதா சியா தனது பதவியைத் துறந்து ஒரு தற்காலிக அரசாங்கத்தை அமைத்தார். சூன் 1996 தேர்தலுக்குப் பிறகு அசீனா பிரதமரானார். நாடு பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்பை அனுபவிக்கத் தொடங்கியபோதிலும், சூலை 2001 இல் முடிவடைந்த அவரது முதல் பதவிக் காலத்தில் நாடு அரசியல் கொந்தளிப்பில் இருந்தது, காலிதா சியா வெற்றி பெற்றார்.

2006-2008 அரசியல் நெருக்கடியின் போது, ​​மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் அசீனா தடுத்து வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, 2008 தேர்தலில் வெற்றி பெற்றார். 2014-இல், வங்காளதேச தேசியக் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பன்னாட்டு பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட தேர்தலில் அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டில், மியான்மரில் இனப்படுகொலையில் இருந்து தப்பியோடிய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரோகிஞ்சா அகதிகள் நாட்டிற்குள் நுழைந்த போது, அவர்களுக்கு அடைக்கலம் மற்றும் உதவி வழங்கியதற்காக அசீனா பெருமையையும் பாராட்டையும் பெற்றார். 2018, 2024 தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்றார். இத் தேர்தல்களில் வன்முறைகளும் மோசடிகளும் இடம்பெற்றதாகப் பரவலாக விமர்சிக்கப்பட்டது.[8]

இவரது ஆட்சியின் கீழ், வங்காளதேசம் சனநாயகப் பின்னடைவைச் சந்தித்ததாக இப்போது பரவலாகக் கருதப்படுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவரது அரசாங்கத்தின் கீழ் பரவலான பலவந்தமான காணாமல் போதல்கள், மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை ஆவணப்படுத்தியது. எண்ணற்ற அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரது கருத்துக்களை எதிர்த்தமைக்காகத் தண்டிக்கப்பட்டனர்.[9][10] 2021 ஆம் ஆண்டில், எல்லைகளற்ற செய்தியாளர்கள் 2014 முதல் வங்காளதேசத்தில் பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அசீனாவின் ஊடகக் கொள்கையின் எதிர்மறையான மதிப்பீட்டை அளித்தனர்.[11] உள்நாட்டில், அசீனா இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டார்.[12][13] வங்கதேச அரசியலில் இந்தியாவின் தலையீட்டின் வெளிப்பாடாக அவர் காணப்பட்டார்.[14] 2018 ஆம் ஆண்டில் டைமின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்களில் அசீனாவும் இருந்தார்,[15] அத்துடன், 2015,[16] 2018, 2022 ஆம் ஆண்டுகளில் போர்ப்ஸ் இவரை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பட்டியலிட்டது.[17][18][19] அவர் உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பெண் அரசுத் தலைவராகவும் இருந்தார்.[20]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, romanized: Śēkh Hāsinā Ōẏājēd

மேற்கோள்கள்

[தொகு]
  1. "President dissolves parliament". The Daily Star (in ஆங்கிலம்). 6 August 2024. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
  2. Miah, M. A. Wazed (1997). বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ (in Bengali). The University Press Limited. p. 242.
  3. "Bangladesh's PM resigns and flees country as protesters storm her residence capping weeks of unrest". தி வாசிங்டன் போஸ்ட். 5 August 2024. https://www.washingtonpost.com/world/2024/08/05/bangladesh-hasina-student-protest-quota-violence/463cd814-52e8-11ef-9a60-5b6e8b4da7c0_story.html. 
  4. Hasnat, Saif; Martínez, Andrés R. (5 August 2024). "What We Know About the Ouster of Bangladesh's Leader". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/article/bangladesh-student-protests.html. 
  5. Crossette, Barbara (9 December 1990). "Revolution Brings Bangladesh Hope". The New York Times இம் மூலத்தில் இருந்து 4 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181104171632/https://www.nytimes.com/1990/12/09/world/revolution-brings-bangladesh-hope.html. 
  6. "Analysis: A tale of two women". BBC News. 2 October 2001 இம் மூலத்தில் இருந்து 13 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160313102335/http://news.bbc.co.uk/2/hi/south_asia/1575704.stm. 
  7. "Magura: Polls then and now". The Daily Star. 7 April 2014 இம் மூலத்தில் இருந்து 3 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103002320/http://www.thedailystar.net/magura-polls-then-and-now-19000. 
  8. "Bangladesh Prime Minister Wins 3rd Term Amid Deadly Violence on Election Day". The New York Times. 30 December 2018. https://www.nytimes.com/2018/12/30/world/asia/bangladesh-election-violence-hasina.html. 
  9. Ali Riaz (September 2020). "The pathway of massive socioeconomic and infracstructuaral development but democratic backsliding in Bangladesh". Democratization 28: 1–19. doi:10.1080/13510347.2020.1818069. 
  10. Larry Diamond (September 2020). "Democratic regression in comparative perspective: scope, methods, and causes". Democratization 28: 22–42. doi:10.1080/13510347.2020.1807517. 
  11. "Predator Sheikh Hasina". Reporters Without Borders (in அமெரிக்க ஆங்கிலம்). 30 June 2021. Archived from the original on 5 July 2021. பார்க்கப்பட்ட நாள் 5 July 2021.
  12. "PM Hasina bins criticism of selling country to India". Dhaka Tribune. https://www.dhakatribune.com/bangladesh/foreign-affairs/350166/pm-hasina-slams-criticism-of-selling-country-to. 
  13. "Sheikh Hasina doesn't sell the country, say prime minister" (in en). Prothomalo. 25 June 2024. https://en.prothomalo.com/bangladesh/76mu2u1gmz. 
  14. "Bangladeshis launch 'India Out' campaign over alleged meddling linked to Hasina" (in en). South China Morning Post. 23 February 2024. https://www.scmp.com/week-asia/politics/article/3253018/bangladeshis-launch-india-out-campaign-over-new-delhis-alleged-meddling-keep-hasina-power. 
  15. "Sheikh Hasina: The World's 100 Most Influential People". Time (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
  16. "The World's 100 Most Powerful Women 2015". Forbes ME (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
  17. "The World's 100 Most Powerful Women". Forbes. 4 December 2018. Archived from the original on 20 September 2017. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018.
  18. "The World's 100 Most Powerful Women". Forbes. 1 November 2017. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  19. "Sheikh Hasina: The World's 100 Most Influential People". Time (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 3 October 2020. பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
  20. Kawser, Rumi (11 September 2019). "Survey: Sheikh Hasina tops as longest serving female leader in world". Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 10 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220610083246/https://archive.dhakatribune.com/world/2019/09/11/survey-sheikh-hasina-tops-as-longest-serving-female-leader-in-world. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_அசீனா&oldid=4060687" இலிருந்து மீள்விக்கப்பட்டது