சனவரி 5
நாள்
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 5 (January 5) கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1066 – இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது.
- 1477 – பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது.
- 1554 – நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன.
- 1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர்.
- 1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
- 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: வர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பெனடிக்ட் ஆர்னோல்டு தலைமையிலான பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
- 1840 – இலங்கையில் மீன் வரி அறவிடுவது நிறுத்தப்பட்டது.[1]
- 1846 – ஒரிகன் பிராந்தியத்தை ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்காவின் கீழவை எதிர்த்து வாக்களித்தது.
- 1854 – சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
- 1882 – அமெரிக்க அரசுத்தலைவர் யேம்சு கார்பீல்டைக் கொலை செய்த குற்றத்திற்காக சார்லசு கிட்டோ என்பவனுக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
- 1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
- 1900 – அயர்லாந்துத் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
- 1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.[2]
- 1918 – செருமன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது.
- 1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
- 1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
- 1945 – போலந்தின் புதிய சோவியத்-சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
- 1950 – சோவியத் ஒன்றியத்தில் சிவெர்திலோவ்சுக் நகரில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த சோவியத் வான் படையின் தேசிய பனி வளைதடியாட்டக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உட்பட அனைத்து 19 பேரும் உயிரிழந்தனர்.
- 1967 – இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1970 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.
- 1971 – உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
- 1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
- 1974 – பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் உயிரிழந்தனர்.
- 1975 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் தாசுமான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- 1976 – கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
- 1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
- 1991 – சியார்சியப் படைகள் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் தரையிறங்கின. 1991–92 Sதெற்கு ஒசேத்தியப் போர் ஆரம்பமானது.
- 1997 – உருசியப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
- 2000 – ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
- 2005 – சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு கண்டுபிடிக்கப்பட்டது.
- 2007 – ஈழப்போர்: கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
- 2014 – இந்திய கடுங்குளிர் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-14 தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
பிறப்புகள்
- 1592 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666)
- 1876 – கொன்ராடு அடேனார், மேற்கு செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1967)
- 1893 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய-அமெரிக்க குரு (இ. 1952)
- 1902 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
- 1926 – ஆர். முத்துசாமி, இலங்கைத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1988)
- 1926 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
- 1927 – சிவாய சுப்ரமணியசுவாமி, இறைவன் கோவிய நிறுவிய அமெரிக்கர், யோக சுவாமிகளின் சீடர் (இ. 2001)
- 1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (இ. 1979)
- 1928 – தில்லைச் சிவன், இலங்கை எழுத்தாளர்
- 1931 – சாருஹாசன், இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர்
- 1932 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய மெய்யியலாளர் (இ. 2016)
- 1934 – முரளி மனோகர் ஜோஷி, இந்திய அரசியல்வாதி
- 1937 – சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
- 1938 – முதலாம் வான் கார்லோஸ், எசுப்பானிய அரசர்
- 1938 – நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்
- 1939 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியல்வாதி (இ. 1997)
- 1941 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
- 1953 – ஆனந்த் சர்மா, இந்திய அரசியல்வாதி
- 1955 – மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்
- 1956 – பிராங் வால்டர் சென்மர், செருமனியின் 14-ஆவது அரசுத்தலைவர்
- 1959 – பாண்டியன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2008)
- 1968 – கனிமொழி, இந்திய அரசியல்வாதி
- 1969 – மர்லின் மேன்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர்
- 1975 – பிராட்லி கூப்பர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1976 – கஞ்சா கறுப்பு, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- 1986 – தீபிகா படுகோண், இந்தியத் திரைப்பட நடிகை
- 1993 – லலித் பாபு, இந்திய சதுரங்க வீரர்
இறப்புகள்
- 1625 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573)
- 1762 – எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியப் பேரரசி (பி. 1709)
- 1913 – லூயி பால் கையேட்டே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1832)
- 1933 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (பி. 1872)
- 1939 – ஓட்டோ க்லேம், தெருமானிய உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1884)
- 1943 – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1864)
- 1952 – விக்டர் ஹோப், இசுக்கொட்டிய அரசியல்வாதி, இந்தியாவின் 46வது தலைமை ஆளுநர் (பி. 1887)
- 1970 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
- 1973 – வெ. துரையனார், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட தென்னாப்பிரிக்கர் (பி. 1891)
- 1975 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1905)
- 1981 – அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)
- 2000 – குமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1938)
- 2014 – எய்சேபியோ, மொசாம்பிக்-போர்த்துக்கீச கால்பந்து வீரர் (பி. 1942)
- 2018 – யோன் யங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)
- 2018 – தாமசு பாப், அமெரிக்க வானியலாளர், ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தவர் (பி. 1949)
- 2021 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (பி. 1934)
- 2022 – காமகோடியன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- 2024 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1937)
சிறப்பு நாள்
- தேசிய பறவை நாள் (ஐக்கிய அமெரிக்கா)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 76