[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கட்லா மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்லா
Young catla.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Catla (but see text)

இனம்:
C. catla
இருசொற் பெயரீடு
Catla catla
(F. Hamilton, 1822)
வேறு பெயர்கள்

Gibelion catla
Cyprinus catla

கட்லா (Catla) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவும் வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

தோற்றம்

இம்மீன் பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.

உணவுப் பழக்கம்

இதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள வலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இந்நுண்ணுயிர்களை சலிப்பதற்கு வசதியாக இம்மீனின் செவிள் கதிர்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. இது இயற்கை உணவைத்தவிர தரப்படும் மேல் உணவையும் (Supplementary food) உண்டு ஓர் ஆண்டில் 1 முதல் 1.5 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.

இனப்பெருக்கக் காலம்

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

உசாத்துணை

காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்லா_மீன்&oldid=1772266" இலிருந்து மீள்விக்கப்பட்டது