கரி
கரி (ஆங்கிலம்-Charcoal) என்பது தாவரங்களும், விலங்குகளும் எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் திட எரிபொருள் ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள நீர், ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் பொருள் கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை தொழிற்சாலைகளில், தீயாற்பகுப்பு/வெப்பச் சிதைவு முறையில் உருவாக்குகின்றனர்.
நம் பூமி அன்னையின் நுரையீரல் எனப்படும், அமேசான் காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. பிரேசில் போன்ற சில நாடுகளின் பொருளாதார வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது.
தோற்றம்
முதன்முதலாக மானுட பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது.எனினும், உலகின் பல இடங்களில் இதன் பயன்பாடு பரவலாக இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் மூலப்பொருட்களை தொழிற்சாலைகளின் மூலம் அறிவியல் முறையில் எரிக்கப்படும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாக திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் காற்று நுழையும் வண்ணம் கட்டிடம் அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது.