[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டோர் லீஜியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கொண்டோர் லீஜியன் (Condor Legion, இடாய்ச்சு மொழி: Legion Condor) என்பது சூலை 1936 முதல் மார்ச் 1939 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஸ்பானிய உள்நாட்டு போரின் போது தேசியவாத படைகளுக்கு ஆதரவாக போரிட்ட செருமானியத் தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களை கொண்ட ஒரு படைப்பிரிவு ஆகும். எசுப்பானிய மக்களின் மன உறுதியை குலைப்பதற்காக இந்த படைப்பிரிவு புதிய முறைகளில் குண்டுவீசியது. இதே போன்ற குண்டு வீசும் முறை இரண்டாம் உலகப்போரின் போது பரவலாக பின்பற்றப்பட்டது. ஜெர்னீகா நகர குண்டுவீச்சு தாக்குதல் இப்படையினரால் ஸ்பானிய உள்நாட்டு போரின் போது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டோர்_லீஜியன்&oldid=1363858" இலிருந்து மீள்விக்கப்பட்டது