[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

தற்காப்புக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.

மாறுபாடுகள் மற்றும் நோக்கங்கள்

தற்காப்பு கலைகளானது விதிமுறைகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.

  • பாரம்பரிய அல்லது வரலாற்று கலைகள்: தற்காலத்திய பாணியிலான நாட்டுப்புற மல்யுத்தம் மற்றும் நவீன கலப்பின தற்காப்பு கலைகள்
  • கற்பிக்கப்படும் நுட்பங்கள்: ஆயுதம் பயன்படுத்தும் வகை, ஆயுதமற்ற வகை. (வாட்போர்த்திறம் கம்புச் சண்டை உள்ளிட்டவைகள்) எழுந்து நின்று சண்டையிடுதல் அமர்ந்திருந்து சண்டையிடுதல்
  • பயன்பாடு அல்லது நோக்கம்: தற்காப்பு, போர் விளையாட்டு, நடன வடிவங்கள்,சண்டை முறை வடிவங்கள், உடற் உடற்பயிற்சிகள், தியானம் போன்றவை.
  • சீன பாரம்பரிய விளைட்யாடுகள் : உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகள்

தொழில்நுட்பம் சார்ந்த நோக்கில்

ஆயுதமற்ற

ஆயுதமற்ற தற்காப்புக் கலைகளானது தாக்குதல், மல்யுத்தப் பிடித்தல் போன்ற பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் கலப்பின தற்காப்புக் கலைகள் என்று விவரிக்கப்படுகிறது

தாக்குதல்

மல்லுக்கட்டு

தூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோ மூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போ குத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ

ஆயுதம் சார்ந்து

ஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.

பயன்பாடு சார்ந்து

சண்டை சார்ந்து

சண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.

உடல்நலன் சார்ந்து

பல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Martial arts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்காப்புக்_கலைகள்&oldid=2425096" இலிருந்து மீள்விக்கப்பட்டது