[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

தற்காப்புக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு.[1] சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.[2]

மாறுபாடுகள் மற்றும் நோக்கங்கள்

தற்காப்பு கலைகளானது விதிமுறைகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.

  • பாரம்பரிய அல்லது வரலாற்று கலைகள்: தற்காலத்திய பாணியிலான நாட்டுப்புற மல்யுத்தம் மற்றும் நவீன கலப்பின தற்காப்பு கலைகள்
  • கற்பிக்கப்படும் நுட்பங்கள்: ஆயுதம் பயன்படுத்தும் வகை, ஆயுதமற்ற வகை. (வாட்போர்த்திறம் கம்புச் சண்டை உள்ளிட்டவைகள்) எழுந்து நின்று சண்டையிடுதல் அமர்ந்திருந்து சண்டையிடுதல்
  • பயன்பாடு அல்லது நோக்கம்: தற்காப்பு, போர் விளையாட்டு, நடன வடிவங்கள்,சண்டை முறை வடிவங்கள், உடற் உடற்பயிற்சிகள், தியானம் போன்றவை.
  • சீன பாரம்பரிய விளைட்யாடுகள் : உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகள்

தொழில்நுட்பம் சார்ந்த நோக்கில்

ஆயுதமற்ற

ஆயுதமற்ற தற்காப்புக் கலைகளானது தாக்குதல், மல்யுத்தப் பிடித்தல் போன்ற பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் கலப்பின தற்காப்புக் கலைகள் என்று விவரிக்கப்படுகிறது

தாக்குதல்

மல்லுக்கட்டு

தூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோ மூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போ குத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ

ஆயுதம் சார்ந்து

ஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.

பயன்பாடு சார்ந்து

சண்டை சார்ந்து

சண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.

உடல்நலன் சார்ந்து

பல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்.

சில தற்காப்பு கலைகள்

குத்துச்சண்டை

குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.

கராத்தே

கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தேப் பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

கபோய்ரா

கபோய்ரா என்பது நடனமும் இசையும் சேர்ந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும். ஏறக்குறைய 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரேசிலிய சுதேச மக்கள் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமை மக்களின் வாரிசுகளால் கபோய்ரா உருவாக்கப்பட்டது. விரைவு, சிக்கலான நகர்வு என்பவற்றால் இது பிரபல்யம் மிக்கது. காலை வீசியடிக்க பாவிக்கப்படும் நெம்பு கோல் செயற்பாட்டிற்காக சக்தியும் வேகமும் பாவிக்கப்படுகிறது. கபோய்ரா எனும் சொல் பிரேசிலில் உள்ள டுபி எனும் மொழியிலிருந்து .

சவாட்

சவாட் அல்லது பிரான்சு குத்துச்சண்டை என்பது கைகள் கால்களைப் பாவித்து, மேலத்தேய குத்துச்சண்டை மற்றும் உதைகள் சேர்ந்த பிரான்சு சண்டைக்கலையாகும்.[3][4] இதில் பாதத்தால் உதைப்பது மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. சவாட் எனும் பிரான்சிய பதத்தின் பொருள் பழைய காலணி என்பதாகும். காலுதைச்சண்டை வகைகளில் சவாட் மாத்திரமே காலணிகளை உபயோகிக்க அனுமதிக்கிறது.

டைக்குவாண்டோ

டைக்குவாண்டோ (Tae Kwon Do) என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை ஆகும். இக்கலை இப்போது உலகின் பல நாடுகளிலும் பரவலாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் பயிற்சி செய்யப்படுகிறது. தென் கொரியாவில் இக்கலை ஒரு தேசிய விளையாட்டாகும். ஒலிம்பிக் போட்டிகளிலும் இது விளையாடப்படுகிறது.

கொரிய மொழியில் Tae (跆) என்பது உதை எனவும் Kwon (拳) என்பது கைகாளால் தாக்குதல் எனவும் Do என்பது (道) கலை எனவும் பொருள்படும். அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம். ஏனைய தற்காப்புக் கலைகள் போல் இதுவும் எதிரியை அடக்க, தற்பாதுகாப்புக்காக, விளையாட்டாக, உடற்பயிற்சிக்காக மற்றும் களியாட்டம் என்று பல வகைகளிலும் இது பயன்பாட்டில் உள்ளது.

டைக்குவாண்டோ கலையில் கால்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் குறிப்பிட்ட வல்லுநர் எதிரி தன்னை நெருங்கும் போது கால்களைப் பயன்படுத்தி எதிரியைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துத் தாக்கிச் செயலிழக்கச் செய்வார்.

யயுற்சு

யயுற்சு (அல்லது சுசுட்சு) (ஜப்பானிய மொழி: 柔術; jūjutsu; ஆங்கிலம்:Jujutsu listen) ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இது பெரும்பாலும் கொழுவுப் பற்றிப் பிடித்தல், அடித்தல் நுணுக்கங்களை மையப்படுத்தியது. இந்தக் கலை சாமுராய் போர்வீரர்களால் ஆயுதம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆயுதம் தரித்த வீரர்களை விரைவாய் செயலிழக்க செய்வதை நோக்காகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது.

சம்போ

சம்போ இரசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.[5][6] சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக சோவியத் ஒன்றிய விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


மேற்கோள்கள்

  1. Clements, John (January 2006). "A Short Introduction to Historical European Martial Arts". Meibukan Magazine (Special Edition No. 1): 2–4 இம் மூலத்தில் இருந்து March 18, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120318130111/http://www.meibukanmagazine.org/Downloads/MMSpecialEdition1.pdf. 
  2. Donn F. Draeger and P'ng Chye Khim (1979). Shaolin Lohan Kung-fu. Tuttle Publishing.
  3. Hontz, Jenny (2006-12-18). "FITNESS BOUND; Holiday pounds? Give 'em a swift kick". The Los Angeles Times. http://articles.latimes.com/2006/dec/18/health/he-savate18. பார்த்த நாள்: 2010-11-25. 
  4. Martin, Adam (1988-10-30). "Getting Your Kicks With French Boxing Lomita Fighting, Fitness Academy Teaches the Sweet Science of Savate". The Los Angeles Times. http://articles.latimes.com/1988-10-30/sports/sp-822_1_fitness-academy. பார்த்த நாள்: 2010-11-25. 
  5. Schneiderman, R.M. (June 19, 2010). "Once-Secret Martial Art Rises in Ring’s Bright Lights". the New York Times. http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html. 
  6. "Once-secret KGB martial art fights for recognition". Time Live. http://www.timeslive.co.za/sport/other/article416843.ece/Once-secret-KGB-martial-art-fights-for-recognition. பார்த்த நாள்: December 4, 2010. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Martial arts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்காப்புக்_கலைகள்&oldid=2425102" இலிருந்து மீள்விக்கப்பட்டது