[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிபீடியாவின் இலட்சினை
வலைதளத்தின் தோற்றம்
தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கம் (திசெம்பர் 2013)
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்திறந்த படிப்பு அணுகல்.
பொது திருத்தத்திற்கு பதிவு தேவையில்லை, ஆனால்
  •  பாதுகாக்கப்பட்ட பக்க தொகுப்பு 
  •  பக்க உருவாக்கம் 
  •  கோப்பு பதிவேற்றம் 
உட்பட சில பணிகளுக்கு அவசியம்
பயனர்கள்2,34,509
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/
பகிர்வுரிமை
3.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது)
ஊடக உரிமம் மாறுபடும்
வெளியீடுசெப்டம்பர் 2003; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2003-09)
உரலிta.wikipedia.org


தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி), விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003இல் இது தொடங்கப்பட்டது. 15 சூலை 2024 அன்று, ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60-ஆம் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[2] 1,66,515 கட்டுரைகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 2,34,509 ஆவர்.

இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா வகுத்துள்ள 'கட்டுரை ஆழம்' எனும் அளவுகோலின்படி, 26-நவம்பர்-2023 அன்று 64 ஆவது இடத்தில் இருந்தது.[3]

வளர்ச்சி

  • 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[4].
  • மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.[5]
  • 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா இருந்தது. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.
  • 2022 - திராவிட மொழிகளில் முதன்முதலில் 1,50,000 கட்டுரைகளைக் கடந்த விக்கிப்பீடியா ஆகும்.

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

எண்ணிக்கை
பக்கங்கள் 5,66,947
கட்டுரைகள் 1,66,515
கோப்புகள் 8,370
தொகுப்புகள் 40,37,630
பயனர்கள் 2,34,509
சிறப்புப் பங்களிப்பாளர்கள் 269
தானியங்கிகள் 191
நிருவாகிகள் 32
அலுவலர்கள் 3
கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் (15 சூலை 2024)
மொழி[6] கட்டுரைகளின் எண்ணிக்கை[7]
உருது விக்கிப்பீடியா (ur)
2,07,909
தமிழ் விக்கிப்பீடியா (ta)
1,66,515
இந்தி விக்கிப்பீடியா (hi)
1,62,670
வங்காள விக்கிப்பீடியா (bn)
1,55,252
மராத்தி விக்கிப்பீடியா (mr)
97,138
தெலுங்கு விக்கிப்பீடியா (te)
97,607
மலையாள விக்கிப்பீடியா (ml)
85,764
நேபால் பாசா விக்கிப்பீடியா (new)
72,360
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)
32,382
கன்னட விக்கிப்பீடியா (kn)
32,382
குசராத்தி விக்கிப்பீடியா (gu)
30,410
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)
25,087
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or)
18,360
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)
17,774
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as)
13,518
வடமொழி விக்கிப்பீடியா (sa)
12,194
போச்புரி விக்கிப்பீடியா (bh)
8,723
காசுமீரி மொழி விக்கிப்பீடியா* (ks)
5,314
பாளி விக்கிப்பீடியா* (pi)
2,556

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
  3. https://meta.wikimedia.org/wiki/Wikipedia_article_depth
  4. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
  5. of Wikipedias
  6. List of Indian language wiki projects
  7. Wikipedia Statistics

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விக்கிப்பீடியா&oldid=3949583" இலிருந்து மீள்விக்கப்பட்டது