[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெட்ரிக் போர்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிரெடரிக் ஃபோர்சித்
பிறப்பு25 ஆகத்து 1938 (1938-08-25) (அகவை 86)
ஆஷ்ஃபோர்ட், கென்ட், இங்கிலாந்து
தொழில்எழுத்தாளர்
தேசியம்பிரிட்டானியர்
காலம்1969 – நடப்பு
வகைஉளவுப்புனைவு,
பரபரப்புப் புனைவு
இணையதளம்
http://www.frederickforsyth.co.uk/

ஃபிரெட்ரிக் ஃபோர்சித் அல்லது ஃபிரெட்ரிக் ஃபார்சித் (Frederick Forsyth, ஆகஸ்ட் 25, 1938) ஒரு ஆங்கில எழுத்தாளர். இவரது உளவுப்புனைவு மற்றும் பரபரப்புப் புனைவுப் புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை.[1][2][3]

இங்கிலாந்தில் கெண்ட் மாநிலத்தில் பிறந்த ஃபோர்சித் தன் இள வயதில் பிரிட்டனின் வேந்திய வான்படையில் சேர்ந்து விமானியாகப் பணியாற்றினார். பின்னர் பத்திரிக்கையாளராக மாறி ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற நிறுவனங்களில் வேலை செய்தார். 1967ல் நைஜீரிய உள்நாட்டுப் போரைப் பற்றி செய்தி சேகரிக்க நைஜீரியாவில் பிபிசி நிருபராகப் பணியாற்றினார். உள்நாட்டுப் போரில் ஒரு தரப்பான பயாஃபராவுக்கு சார்பாகச் செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றாச்சாட்டு எழுந்ததால் பிபிசியை விட்டு வெளியேறினார். தனது நைஜீரிய அனுபவங்களை தி பயாஃபரா ஸ்டோரி (The Biafra Story) என்ற பெயரில் 1969ல் அபுனைவு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அமைப்பு சார்பற்ற எழுத்தாளராகப் பணியாற்றிய போது இதழாளர்கள் பயன்படுத்தும் புலனாய்வு முறைகளை பயன்படுத்தி ஒரு புதினம் எழுதும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதன்படி எழுதப்பட்ட தி டே ஆஃப் தி ஜாக்கால் (The Day of the Jackal) 1971ல் வெளியாகி பெருவெற்றி பெற்றது. பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டி கோலைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப் படும் ஒரு (கற்பனை) சதிமுயற்சியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட இப்புதினம், ஆங்கில பரபரப்புப் பாணியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உலகெங்கும் லட்சக்கணக்கான படிகள் விற்பனையாகி சிறந்த எழுத்தாளுருக்கான எட்கர் ஆலன் போ விருதையும் ஃபோர்சித்துக்குப் பெற்றுத் தந்தது. உண்மையாக நிகழ்ந்திருக்கக் கூடிய சம்பவங்களின் அடிப்படையில் பன்னாட்டு அரசியல், உளவுத் துறைகள், போர்கள் போன்ற விஷயங்களைக் களமாகக் கொண்டு ஃபார்சித் மேலும் பல புதினங்களை எழுதினார். அவையும் வாசகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட அவற்றுள் சில திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

ஃபோர்சித் ஒரு பழமைவாதக் கட்சி ஆதரவாளர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணையக் கூடாது என்ற நிலையைக் கொண்டவர்.

எழுதிய புத்தகங்கள்

[தொகு]
வருடம் புத்தகம் தலைப்பு
1969 தி பயாஃபரா ஸ்டோரி அபுனைவு
1971 தி டே ஆஃப் தி ஜாக்கால்
1972 தி ஒடிசா ஃபைல்
1974 தி டாக்ஸ் ஆஃப் வார்
1975 தி ஷெப்பெர்ட் சிறுகதை
1979 தி டெவில்ஸ் ஆல்டர்நேட்டிவ்
1982 எமெக்கா வாழ்க்கை வரலாறு
1982 நொ கம்பாக்ஸ் சிறுகதைத் தொகுப்பு
1984 தி ஃபோர்த் புரோட்டாக்கால்
1989 தி நெகோஷியேட்டர்
1991 தி டிசீவர்
1991 கிரேட் ஃபிளயிங் ஸ்டோரீஸ் தொகுப்பாசிரியர்
1994 தி ஃபிஸ்ட் ஆஃப் காட்
1996 ஐக்கன்
1999 தி ஃபாண்டம் ஆஃப் தி மன்ஹாட்டன்
2001 தி வெடரன் சிறுகதைத் தொகுப்பு
2003 தி அவெஞ்சர்
2006 தி ஆஃப்கன்
2010 தி கோப்ரா

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Leeman, Sue (3 September 2006). "Forsyth Looks at World of Al-Qaida". Associated Press. https://news.google.com/newspapers?nid=2199&dat=20060903&id=XWxUAAAAIBAJ&pg=6521,848695&hl=en. 
  2. "No. 40902". இலண்டன் கசெட் (Supplement). 16 October 1956. p. 5846.
  3. "No. 41165". இலண்டன் கசெட் (Supplement). 3 September 1957. p. 5169.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்ரிக்_போர்சித்&oldid=4100848" இலிருந்து மீள்விக்கப்பட்டது