[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:தமிழீழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



தொகு  தமிழீழ வலைவாசல்


தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்.

தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.

தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.

தமிழீழம் பற்றி மேலும் அறிய...
தொகு  சிறப்புக் கட்டுரை


முத்துக்குமார்
ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது வன்னியில் இலங்கை அரசு நடத்தும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் 2009 ஆம் ஆண்டில் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் தீக்குளிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய நிகழ்வுகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் முதன் முறையாக 2009, சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளால், தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என மொத்தம் பதினேழு பேர் இதுவரை இறந்துள்ளார்கள்.
தொகு  இதே மாதத்தில்


வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஆகத்து

தொகு  செய்திகளில் தமிழீழம்


விக்கிசெய்திகளில் தமிழீழ வலைவாசல்
தொகு  தமிழீழ நபர்கள்


பாலு மகேந்திரா தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர்,இலங்கையில், மட்டக்களப்பில் பிறந்தவர்; இயற்பெயர், பெஞ்சமின் மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலை கல்வி படிப்பினை முடித்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவினைப் பயின்றார். அங்கு தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டவர், பாலு. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.

பல்வேறு கருப்பொருள் கொண்ட கதைகளை யதார்த்தமாக உலகத் தரத்திற்கு இணையாக இயக்கியுள்ளார். "மூன்றாம் பிறை", "அழியாத கோலங்கள்", "வீடு", "சந்தியா ராகம்", "மறுபடியும்", "மூடு பனி" முதலியன இவருடைய புகழ் பெற்ற படங்களில் சில.

பாலுவின் பட்டறையிலிருந்து வெளிவந்த பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக திகழ்கின்றனர். "சேது","நந்தா","பிதாமகன்" போன்ற தனித்துவமான படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

தொகு  உங்களுக்குத் தெரியுமா...


தொகு  நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • தமிழீழம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|தமிழீழம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழீழம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழீழம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  விக்கித்திட்டங்கள்
தொகு  சிறப்புப் படம்


இலங்கையின் தேயிலைத்தோட்டத்தில் வேலைச் செய்யும் இந்தியத் தமிழர்கள்
இலங்கையின் தேயிலைத்தோட்டத்தில் வேலைச் செய்யும் இந்தியத் தமிழர்கள்
படிம உதவி: User:Trengarasu

இலங்கையின் இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர் எனப்படுவோர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து இலட்சக் கணக்கில் கொண்டுவரப்பட்டு இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழிவரும் மக்களாவர்.

தொகு  தமிழீழம் தொடர்பானவை



தொகு  பகுப்புகள்


தமிழீழ பகுப்புகள்

தொகு  தொடர்புடைய வலைவாசல்கள்

தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ்நாடு தமிழ் வரலாறு இலங்கை தமிழர்
தொகு  பிற விக்கிமீடிய திட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழீழம்&oldid=3998277" இலிருந்து மீள்விக்கப்பட்டது