[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

ரே கர்ஸ்வயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே கர்ஸ்வயில்

ரே கர்ஸ்வயில்  (Raymond "Ray" Kurzweil 1948 பிப்பிரவரி 12) என்பவர் அமெரிக்க நூலாசிரியர், கணினி அறிவியலாளர், புதுப்புனைவர், மற்றும் எதிர்கால கணிப்பாளர் ஆவார். ஒளி எழுத்துணரி, எழுத்திலிருந்து பேச்சு, பேச்சை உணரும் தொழில் நுட்பம் என கணினி தொடர்பானவற்றில் ஈடுபாடு கொண்டவர்.[1] மக்களின் உடல் நலம், செயற்கை நுண்ணறிவு போன்ற பொருண்மைகளில் நூல்கள் எழுதியுள்ளார். 1999 இல் தேசிய தொழில்நுட்ப பதக்கம் பெற்றதோடு பிற விருதுகளும் பெற்றுள்ளார்.

இளமைக் காலம்

[தொகு]

ஆத்திரியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த யூதப் பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த ரே கர்ஸ்வயில் நியூயார்க்கு நகரத்தில் வளர்ந்தார். 5 அகவையிலேயே தாம் புதுப்புனவர் ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் வளர்ந்தார். 1970 இல் மசாசூசட்சு தொழில் நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து படித்து கணினி அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் பட்டம் பெற்றார்.

எழுதிய நூல்கள்

[தொகு]

கர்ஸ்வயில்  ஏழு நூல்களை எழுதியுள்ளார். 'தி ஏஜ் ஆப் ஸ்பீரிச்வல் மெஷின்ஸ்' என்ற நூல் 9 மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவருடைய இணையத் தளத்தை மூன்று மில்லியன் மக்கள் படிக்கிறார்கள்.

பெற்ற விருதுகளும் மதிப்புகளும்

[தொகு]

புகழ் பெற்ற தேசிய புதுப்புனவர்கள் வரிசையில் இடம்பெற்றார்.  20 மதிப்புறு முனைவர் பட்டங்கள் பெற்றார். எம் ஐ டி லெமெல்சன் பரிசு ஐந்து இலக்கம் டாலர்கள் பெற்றார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரசுத் தலைவர் பில் கிளின்டன் இவருக்குத் தேசிய தொழில் நுட்பப் பதக்கத்தை அளித்தார்.

மேற்கோள்

[தொகு]
  1. "Inventor Profile Ray Kurzweil". Invent Now, Inc. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_கர்ஸ்வயில்&oldid=2894233" இலிருந்து மீள்விக்கப்பட்டது