ராபர்ட் ஈ. லீ
ராபர்ட் எட்வர்ட் லீ (Robert Edward Lee, ஜனவரி 19, 1807-அக்டோபர் 12, 1870) 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவத் தளபதியும் பொறியியலாளரும் ஆவார். 32 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்தார். மெக்சிக-அமெரிக்கப் போரில் அதிகாரியாக இருந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் கூட்டமைப்பு படையில் தளபதியாக பணியாற்றினார்.
Robert Edward Lee ராபர்ட் ஈ. லீ | |
---|---|
ராபர்ட் ஈ. லீ, கூட்டமைப்பு இராணுவத்தின் தளபதி, 1863இல் எடுத்த படிமம் | |
சார்பு | ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு |
சேவைக்காலம் | 1829–61 (ஐ.அ.) 1861–65 (அ.மா.கூ.) |
தரம் | கர்னல் (ஐ.அ.) தளபதி (அ.மா.கூ.) |
கட்டளை | வடக்கு வர்ஜீனியாவின் இராணுவம் |
போர்கள்/யுத்தங்கள் | மெக்சிக-அமெரிக்கப் போர் அமெரிக்க உள்நாட்டுப் போர் |
வேறு செயற்பாடுகள் | வாஷிங்டன் மற்றும் லீ பல்கலைக்கழகத்தின் தலைவர் |